• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும் உள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும் உள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/29
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கரூரில் நடந்தது பெரும் துயரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது,

கரூரில் நடந்த சம்பவம் பெரும் துயரம், இதுவரை நடக்காத துயரம், இனி நடக்கக்கூடாத துயரம்.

மருத்துவமனைக்கு நான் நேரில் சென்று கண்ட காட்சிகள் என் கண்களை விட்டு அகலவில்லை. நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் உள்ளேன்.

செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளை பிறப்பித்தபின்னரும் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு சென்றேன்.

குழந்தைகள், பெண்கள் என 41 உயிர்களை நாம் இழந்துள்ளோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் அறிவித்து அவற்றை உடனடியாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம்.

நடந்த சம்பவங்களுக்கான முழுமையான, உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்பதை உறுதியளிக்கிறேன்.

இதற்கிடையே, சமூகவலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்பொழுதும் விரும்பமாட்டார்கள் .

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் நமது தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளை தவிர்க்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது இனிவரும் காலங்களில் எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் அனைவரது கடமை. எனவே நீதியரசரின் ஆணைய அறிக்கை கிடைத்தப்பின் அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

அத்தகைய நெறிமுறைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். மனித உயிர்களே அனைத்திற்கும் மேலானது. மானுட பற்றே அனைவருக்கும் வேண்டியது.

அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என அனைத்தையும் விலக்கி வைத்துவிட்டு அனைவரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு எப்பொழுதுமே நாட்டிற்கு பலவகைகள் முன்னோடியாக இருந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related

Tags: MK Stalintvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

Next Post

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

Related Posts

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்
இலங்கை

நாளை முதல் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்

2026-01-25
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
இலங்கை

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

2026-01-25
பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

2026-01-25
மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!
இலங்கை

மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!

2026-01-25
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
Next Post
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம்!

இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் அவதானம்!

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பான் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

0
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

2026-01-26

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.