இந்திய சினிமாவின் வரையறுக்கப்பட்ட மைல் கற்களை உடைத்தெறிந்த திரைப்படங்களுள் பாகுபலி பாகம் 1 மற்றும் பாகுபலி பாகம் 2 ஆகிய திரைப்படங்கள் மிக முக்கியமானவை.
அத்தோடு பாகுபலி பாகம் 1, பாகுபலி பாகம் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எஸ்.எஸ். ராஜமௌலியை பிரம்மாண்ட இயக்குநர் என்ற உச்சத்திற்கு கொண்டு போய் சேர்த்ததமை குறிப்பிடதக்கது.
பாகுபலி தொடரின் கதை சொல்லும் பாங்கு,கற்பனை திறன் ,ஒவ்வொரு காட்சிகளுக்குமான பிரம்மாண்டம் என்பன இந்திய சினிமாவை உலகளவில் நிலைநிறுத்த காரணமாகியது.
இவ்வாறு உலக வாழ் சினிமா இரசிகர்களை தன்னகத்தே ஈர்த்த இத் திரைப்படம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
இயக்குநர் ராஜமௌலியின் முயற்சியில் பாகுபலி பாகம் 1 மற்றும் பாகம் 2 என்பன மறு திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட பதிப்பு மீண்டும் அதே பிரம்மாண்ட மிடுக்கோடு பாகுபலி த எபிக் என்ற வடிவில் இரண்டு பாகங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு தடையற்ற ஒரே காவியமாக ஒக்டோபர் 31 ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ள இத் திரைப்படத்திற்கான ஆர்வம் இரசிகர்களிடையே அதிகரித்து வருகின்ற நிலையில் இயக்குநனரான ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் தீவிரமாக இறுதிக்கட்ட பணிகளை மேற்கொள்ளும் படங்கள் வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
இதனால் பாகுபலி த எபிக் இற்கான ஆவல் இரசிகர்களிடையே மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.


















