ஹம்பாந்தோட்டை, ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரட்டைக் கொலை நடந்துள்ளது.
கூர்மையான ஆயுதங்களால் தாக்கி இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்தக் கொலை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் 28 வயதுடைய ஒரு ஆணும், மற்றையவர் அவரது மனைவி என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் இருப்பதாகவும், தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கொலையை யார் செய்தார்கள், என்ன காரணத்திற்காக செய்தார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும், மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான பிரதே பரிசோதனைகள் இன்று (07) நடத்தப்படவுள்ளன.
இந்த சம்பவம் குறித்து ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














