புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது.
அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம்.
GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது.
அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது.
பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த வர்த்தகத்தில் இப்போது மிகுந்த நம்பிக்கை இருப்பதால், தங்கத்தின் விலையானது எதிர்காலத்தில் 5,000 டொலர்களை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உறுதியான மத்திய வங்கி கொள்முதல், தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் முதலீடு மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் மஞ்சள் உலோகத்தின் ஏற்றம் உந்தப்பட்டுள்ளது.
அதேநேரம், ஏனைய விலைமதிப்பற்ற உலோகச் சந்தைகளில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.3 சதவீதம் உயர்ந்து 48.42 அமெரிக்க டொர்களாகவும், பிளாட்டினம் 2.5 சதவீதம் உயர்ந்து 1,658.40 அமெரிக்க டொலர்களாகவும், பல்லேடியம் 1.8 சதவீதம் உயர்ந்து 1,361.89 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.
இதனிடையே, அமெரிக்க அரசாங்க முடக்கம் செவ்வாயன்று (07) ஏழாவது நாளை எட்டியது.
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 296,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.














