பாலியல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ( Brahim Kaddour-Cherif,) பிரஹிம் கடூர்-செரிஃப் தவறுதலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் , உள்ளூர்வாசிகள் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து தகவல் வழங்கியுள்ளனர்.
இதை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் உடனடியாக குறித்த நபரை கைது செய்துள்ளார்.
இதேவேளை , குறித்த நபர் கைது செய்யப்படுவதற்கு தகவல் வழங்கிய முக்கிய நபராக வட ஆப்பிரிக்காவை சேர்ந்த நட்ஜிப் என்பவர் செயற்பட்டுள்ளார்.
அவரின் கருத்துப்படி, HMP வாண்ட்ஸ்வொர்த்தில் இருந்து குறித்த கைதி விடுவிக்கப்பட்டதிலிருந்து வடக்கு லண்டனின் பல்வேறு பகுதிகளிலும் அவரை தான் தேடிவந்ததாக நட்ஜிப் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றவாளிகள் மீது தனக்கு காணப்படும் அளவுகடந்த வெறுப்பே அவரை இவ்வாறு தேடுவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.














