அண்மையில் இங்கிலாந்து புகையிரதத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிகை அலங்கார கடை உரிமையாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் குறித்த சந்தேகநபர் அன்றையதினம் குறித்த சிகை அலங்கார கடைக்கும் சென்று அங்குள்ளவர்களையும் அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை குறித்த சிகை அலங்கார கடைக்கு வெளியே நின்ற ஒருவர் கடையின் உள்ளே நுழைவதற்கு முன்பு கத்தியை அசைத்து குறித்த கடையில் உள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சிகள் அங்கு காணப்பட்ட கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.
அதில் குறித்த நபரிடமிருந்து தப்பி செல்வதற்காக ,கடையில் இருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் கடையின் பின்புறம் ஓடுவதும் CCTV கெமராக்களில் பதிவாகியுள்ளது எனவும் தாம் விரைந்து செயற்பட்டமையினால் இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதத்திலிருந்து தப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நபரினால் தாமும் சிலவேளைகளில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்த அவர் ஹண்டிங்டன் கத்திக்குத்து தாக்குதலை பொலிஸார் தீவிரமாக எடுத்துக் கொண்டால் இனி வரும் காலங்களில் கத்திக்குத்து தாக்குதல்களை தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.














