2025 ஆம் ஆண்டில், உழைக்கும் குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தின் மிகவும் மலிவு விலை நகரமாக கவுண்டி டர்ஹாமில் (County Durham) உள்ள ஷில்டன் பெயரிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொத்துக்கள் தொடர்பான வலைத்தளமான ஜூப்லா (Zoopla) நடத்திய ஆய்வில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சராசரி சொத்து மதிப்புகள், இரண்டு வருமானம் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வீட்டு வருமானத்திற்குச் சற்று அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலுவான ரயில்வே பாரம்பரியம் மற்றும் லோகோமோஷன் அருங்காட்சியகத்திற்குப் பெயர் பெற்ற ஷில்டன் நகரில் வீடு வாங்குபவர்கள் பொதுவாக 73,900 பவுண்ட்ஸ்கள் செலவிடப்படலாம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
டார்லிங்டன், பிஷப் ஆக்லாந்து மற்றும் பர்னார்ட் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் அண்மையில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.


















