ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் 10 ஆவது சீசன் 2026 பெப்ரவரி 7 அன்று தொடங்கவுள்ளது.
நடப்பு சம்பியனான இந்தியா உட்பட மொத்தம் ஆறு அணிகள் தொடக்க நாளில் விளையாடும்.
ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணியாக மாற அவர்கள் மும்பையில் அமெரிக்காவை எதிர்கொள்வார்கள்.
20 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து 29 நாட்களிலும் எட்டு இடங்களிலும் (இந்தியாவில் ஐந்து மற்றும் இலங்கையில் மூன்று) நடத்தும்.
பெப்ரவரி 7 முதல் 20 வரை மொத்தம் 40 குழு போட்டிகள் நடைபெறும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பெப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் போட்டியின் சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறும்.
சூப்பர் 8 சுற்றுகளின் முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறுகின்றன.
மார்ச் 8 ஆம் திகதி அகமதாபாத் அல்லது கொழுபில் நடைபெறும் பட்டத்தை தீர்மானிக்கும் போட்டிக்கு முன்னதாக அரையிறுதிப் போட்டிகள் கொல்கத்தா அல்லது கொழும்பு மற்றும் மும்பையில் நடைபெறும்.



















