கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கைகள் இன்று (26) காலை 8:00 மணி முதல் நாளை (27) இரவு 8:00 மணி வரை அமுலில் இருக்கும்.
இதேவேளை பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரம் முறிந்து வீழ்தல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














