• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

“மூன்றாம் உலகப் போரை புடின் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்” – ஸெலன்ஸ்கி

ரஷ்யா மற்றும் யுக்ரைன் போருக்கு இன்றுடன் 4 ஆண்டுள் நிறைவு

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/02/24
in ஆசிரியர் தெரிவு, உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

மூன்றாம் உலகப் போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஏற்கெனவே தொடங்கி விட்டதாக யுக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி யுக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் சுருக்கத்தை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதன் போது அவர் தெரிவித்துள்ளதாவது :  ‘வான் பாதுகாப்பு என்பது இன்று மிகவும் சவாலான பிரச்சினையாக உள்ளது. துரதிருஷ்டவசமாக வான் பாதுகாப்பு அமைப்புகளை நாங்களே தயாரிக்க அனுமதிக்கும் உரிமங்களை எங்கள் நட்பு நாடுகள் எங்களுக்கு வழங்கவில்லை. குறைந்தபட்சம் ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகளை தயாரிக்க வேண்டும். இதுவரை நாங்கள் அதில் வெற்றி பெறவில்லை.

இந்தப் போரில் உக்ரைனை வலிமையாக்க வேண்டும் என்றால் எங்கள் வான் பரப்பை மூட வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். பொருளாதாரம் செயல்பட வேண்டும். பணப்புழக்கம் இருக்க வேண்டும்இ வரிகள் மூலம் கிடைக்கும் பணம் ராணுவத்துக்குச் செலவிடப்பட வேண்டும். இந்த வழியில்தான் நாங்கள் எங்கள் ராணுவத்தை பலப்படுத்துகிறோம்.  துரதிருஷ்டவசமாக இது இன்னும் நடக்கவில்லை. ஏவுகணைகளுக்கான உரிமங்களாவது எங்களுக்குத் தேவை.

மூன்றாம் உலகப் போரைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. புடின் அதை ஏற்கெனவே தொடங்கிவிட்டார் என்றே நான் நம்புகிறேன். கேள்வி என்னவென்றால் அவர் எவ்வளவு நிலப்பரப்பை கைப்பற்ற முடியும் என்பதும் அவரை தடுப்பது எப்படி என்பதும் தான். ரஷ்யா வெற்றி பெறுவதை தடுக்க வேண்டும். ஏனெனில் ரஷ்யா தனது சொந்த உலகத்தை மற்றவர்கள் மீது திணிக்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்வதை மாற்றுகிறது. அதனால்தான் புடின் மூன்றாம் உலகப் போரை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன்.

இது பரந்த முழு அளவிலான மூன்றாம் உலகப் போராக மாறுவதை நாங்கள்தான் தடுத்துக் கொண்டிருக்கிறோம். புடினை தடுக்கும் புறக்காவல் நிலையமாக யுக்ரைன் இன்று உள்ளது.

இன்று ஐரோப்பா எங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அமெரிக்காவிடம் இருந்து Pருசுடு என்ற வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் திட்டத்துக்கு ஐரோப்பா நிதி உதவி அளிக்கிறது. ஆனால் இது போதுமானதா என்றால் நான் மாறுபடுகிறேன்.

ஒரு நாட்டுக்கு கணிசமான நிதியை ஒதுக்குவதால் போதுமான அளவு நிதி உதவியை அளிப்பதாகக் கூறும் நாடுகள் உள்ளன. மிகக் குறைவாக நிதி ஒதுக்கும் நாடுகளும் உள்ளன. உதவியை தடுப்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு தீங்கு விளைப்பவர்களைவிட இவர்கள் மேலானவர்கள்.

ஒட்டுமொத்த அளவில் வழங்கப்படும் நிதி உதவி போதுமானதா என்றால் இல்லை என்பதுதான் எனது பதில் ஆனால் ஐரோப்பாவைப் பொறுத்தவரை அது யுக்ரைனுக்கும் யுக்ரைன் மக்களுக்கும் ஆதரவாக இருந்து உதவி வருகிறது. ஆனால் எங்களுக்கு இன்னும் அதிக தேவை உள்ளது. ஏனெனில் ரஷ்யா அளவுக்கு எங்களிடம் ஆயுதங்கள் இல்லை. என்று தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் குறித்து நாம் பேசும்போது ஆட்சேர்ப்புக்குப் பதிலாக ஒப்பந்தங்களுக்கு மாறும்போது ஐரோப்பா எங்களுக்கு உதவ முடியும். புதின் இதைத்தான் செய்கிறார். அவர் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்துகிறார். நாங்களும் இதைச் செய்ய விரும்புகிறோம். ஆனால் எங்களிடம் போதுமான அளவு நிதி இல்லை. இதற்கு ஐரோப்பியர்கள் உதவ முடியும். இதற்கு இன்னும் ஐரோப்பியர்கள் இன்னும் நிதி உதவி அளிக்கவில்லை’ என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் நடவடிக்கை எடுத்த நிலையில்  அதை தடுக்கும் நோக்கில் அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 2022-ம் ஆண்டு பிப்.24-ம் திகதி தொடங்கியது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

Next Post

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

Related Posts

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்
ஈரான்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

2026-04-08
2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!
உலகம்

2027 முதல் கிரீஸில் 15 வயதுக்குட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாடுக்கு தடை!

2026-04-08
மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!
உலகம்

மார்ச் மாதத்தில் சரிந்த இங்கிலாந்தின் சராசரி வீட்டு விலைகள்!

2026-04-08
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!
இங்கிலாந்து

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

2026-04-08
தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!
ஆசிரியர் தெரிவு

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் உட்பட 10 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு!

2026-04-08
கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!
இங்கிலாந்து

கன்யே வெஸ்ட்டின் இங்கிலாந்து நுழைவுக்கான தடையுடன் வயர்லெஸ் திருவிழா இரத்து!

2026-04-08
Next Post
தனியார் வசமாகும் மின்சார சபை?

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர்!

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

0
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

0
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

0
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

0
இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் குவைத் ஏர்வேஸ்!

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

இலங்கையைக் கட்டியெழுப்பும் பாரிய திட்டம்! பிரதமர் தலைமையில் கூடியது ஜனாதிபதி செயலணி

2026-04-08

Recent News

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

2026-04-08
மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

2026-04-08
புறக்கோட்டை மத்திய பேருந்து  நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

2026-04-08
நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

2026-04-08
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.