கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கிளிநொச்சி மாவட்டத்தின் பொக்கணை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு 274 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதன்படி, பொக்கணை (கிளிநொச்சி): 274 மி.மீ மழைவீழ்ச்சியும் போர்த்துகெரி (மன்னார்): 210 மி.மீ மழைவீழ்ச்சியும் மடு (மன்னார்): 193 மி.மீ மழைவீழ்ச்சியும் துனுமலே தோட்டம் (கேகாலை): 181 மி.மீ மழைவீழ்ச்சியும் கிரிந்திவெல (கம்பஹா): 121 மி.மீ மழைவீழ்ச்சியும் கிளென்தில்ட் தொழிற்சாலை (நுவரெலியா): 104 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.














