தற்போதைய அனர்த்த நிலைமையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் தொழில்நிபுணர்களின் குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்குவதற்காக, நாளை (01) முதல் பாதுகாப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்குமாறு அனைத்து சிறுவர் பராமரிப்பு நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
















