கடந்த 2019 ஆம் ஆண்டு (RAF Croughton) ஆர்.ஏ.எஃப். க்ரோட்டனுக்கு வெளியே நடந்த விபத்தில் கொல்லப்பட்ட ஹாரி டன் (Harry Dunn) என்ற இளைஞரின் மரணம் தொடர்பான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட அமெரிக்க ஓட்டுநரான (Anne Sacoolas) ஆன் சக்கூலாஸ், ராஜதந்திர விலக்களிப்பைப் பயன்படுத்தி இங்கிலாந்தை விட்டு வெளியேறியதையடுத்து, டன்னின் குடும்பம் ஆறு ஆண்டுகளாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகப் போராடியது.
(Dame Anne Owers) டேம் அன்னே ஓவர்ஸ் தலைமையிலான இந்த விசாரணை, குறிப்பாக வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தில் (FCO), இந்த வழக்கை கையாண்டதில் இங்கிலாந்து அரசாங்கத்தின் பல தோல்விகள் மற்றும் குறைபாடுகளை அம்பலப்படுத்தியது.
அரசாங்கமானது தீவிரமான ஊடக வெளிச்சத்திற்குப் பின்னரே விடயங்களை உயர் மட்டத்திற்குக் கொண்டு சென்றது என்றும், அப்போதைய வெளியுறவுச் செயலர் முன்னதாகவே தலையிட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியது.
இதேவேளை இந்த வழக்கு குறித்த அரசாங்கத் தவறுகள் தங்களுடைய துயரத்தை அதிகப்படுத்தியதாகவும் இது மிகவும் வேதனையானது என்றும் டன்னின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.













