லிவர்பூலில் இடம்பெற்ற விபத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லிவர்பூலில் குறித்த பெண் கடைகளுக்குச் செல்லும்போது வேகமாக வந்த கார் ஒன்று அவரை இடித்து சென்றுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை (Fazakerley ) ஃபாஸாகர்லியில் (Longmoor Lane) லாங்மூர் லேன் பகுதியில் அந்தப் பெண்ணை இடித்துவிட்டு குறித்த கருப்பு நிற கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து நிற்காமல் தப்பிச் சென்றுவிட்டார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டகுறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து மெர்சிசைட் காவல்துறை விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதேவேளை, விபத்துக்கான முழு விவரங்களையும் கண்டறியும் முயற்சியில், காவல்துறை கண்காணிப்பாளர் மக்கள் தங்கள் சிசிடிவி, டேஷ்கேம் காட்சிகள் அல்லது சேதமடைந்த காரைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அந்த ஓட்டுநர் மனசாட்சியுடன் தானாக முன்வந்து சரணடைய வேண்டும் என்றும் அதிகாரிகள் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















