2026 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 50 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சாதனை பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கால்பந்து உலக நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
அந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு $42 மில்லியன் ஆகவும், 2018 ஆம் ஆண்டு $38 மில்லியன் ஆகவும் இருந்தது.
அதேநேரம், அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் உலகக் கிண்ணத்துக்கான மொத்த பரிசு நிதி 655 மில்லியன் டொலர்கள் என்றும் FIFA தெரிவித்துள்ளது.
இது கட்டாரில் நடைபெற்ற முந்தைய FIFA உலகக் கிண்ண சீசனுக்கான பரிசுத் தொகையை விடவும் 50 சதவீதம் அதிகமாகும்.
2026 ஆம் ஆண்டுக்கான FIFA உலகக் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


















