சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்லாமிய அரசு குழு (IS) மீது தனது இராணுவம் “பாரிய தாக்குதலை” நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதன்படி, மத்திய சிரியா முழுவதும் பல இடங்களில் 70க்கும் மேற்பட்ட ஐஎஸ் இலக்குகள் மீது, போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பீரங்கிகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை நிறுவனமான சென்ட்காம் (Centcom) தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட ஐ.எஸ் உள்கட்டமைப்புகள் மற்றும் ஆயுத தளங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துல்லிய தாக்குதலில் ஜோர்தானின் விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
ஐஎஸுக்கு எதிரான Operation Hawkeye Strike வெள்ளிக்கிழமை கிழக்கு நேரப்படி மாலை 4:00 மணிக்கு தொடங்கப்பட்டதாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தோ-பசுபிக் பகுதிகளில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வழிநடத்தும் சென்ட்காம் எக்ஸில் பதவிட்ட அறிக்யைில் சுட்டிக்காட்டியுள்ளது.














