அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட டி:20 கிரக்கெட் தொடரினை இந்தியா 3:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்றிரவு 07.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்கியது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 231 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய அணி சார்பில் திலக் வர்மா 42 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 73 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 63 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பின்னர், 232 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
அணி சார்பில் அதிகபடியாக குயின்டன் டி காக் 35 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் இந்தியா சார்பில் வருண் சக்ரவர்த்தி அதிகபடியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டதுடன், தொடரின் நாயகனாக வருண் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வார தொடக்கத்தில் லக்னோவில் நடந்த இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி:20 போட்டி மூடுபனி காரணமாக இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















