தாய்வான் தலைநகர் தபேயில் நேற்று (19) மாலை கூரிய ஆயுதத்தைக் கொண்டு நபர் ஒருவர் நடத்திய தாக்குதலின் விளைவாக மூன்று பேர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
27 வயதான சந்தேக நபர், தபேயின் பிரதான மெட்ரோ நிலையத்தில் புகை குண்டுகளை வெடிக்கச் செய்து, பின்னர் பரபரப்பான ஷொப்பிங் மாவட்டத்தில் உள்ள மற்றொரு நிலையத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக் குத்துத் தாக்குதலை மேற்கொண்டதாக தாய்வான் பிரதமர் சோ ஜங்-தை (Cho Jung-tai) தெரிவித்துள்ளார்.
தாய்வானைச் சேர்ந்த சாங் வென் என அதிகாரிகளால் அடைாயளம் காணப்பட்ட சந்தேக நபர், தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் ஆறு மாடிக் கட்டிடத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தேக நபரின் தாக்குதல் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை.
வன்முறை குற்றங்கள் குறைவாக உள்ள தாவானில் இவ்வாறான தாக்குதல்கள் அரிதானவை.
இதேபோன்ற சம்பவம் இறுதியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர், அதாவது 2014 இல் தபேயில் நிகழ்ந்தது.














