ராகம பகுதியில் உள்ள ஒரு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து இரண்டு மெகசின்களுடன் கூடிய T56 துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கமான பொலிஸ் சோதனையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கையின் போது குறித்த வாகனம் கவனிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
துப்பாக்கியுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆயுதம் எவ்வாறு அந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது என்பதையும், அண்மைய குற்றச் செயல்களுடன் இது தொடர்புடையதா என்பதையும் கண்டறிய மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.














