மதுகம – அளுத்கம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டிசம்பர் 25 ஆம் திகதி குறித்த வீதியின் 5 ஆவது மைல்கல்லுக்கு அருகில் அளுத்கமவிலிருந்து மதுகம நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த பொலேரோ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மோதலில் மோட்டார் சைக்கிளின் சாரதி, பின்னால் அமர்ந்திருந்த பெண் மற்றும் மூன்று வயது சிறுமி ஆகியோர் காயமடைந்து தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இரண்டு நபர்களும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாகோட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
விபத்து தொடர்பாக பொலேரோ வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.















