இலங்கையின் இசைக்குயில் கலாசூரி லதா வல்பொல தனது 92 ஆவது வயதில் காலமானார்.
சிங்களத் திரையிசை மற்றும் மெல்லிசைத் துறையில் பல தசாப்தங்களாகத் தனது கணீர் குரலால் இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த அவர், இலங்கையின் இசைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காக ‘கலாசூரி’ உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
அன்னாரின் மறைவு இலங்கையின் கலைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
அன்னாரது உடலம் நேற்று இரவு கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்திய சாலையில் இருந்து இறுதிக்கிரியைகளுக்காக கொழும்பு தனியார் மலர் சாலை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில் அவரின் இறுதிக்கிரியை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னாரது உடல் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிவரை கொழும்பில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்றது.
பின்னர் சுதந்திர சதுக்க வளாகத்தில் அன்னாரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதன் பின்னர், பொரளை பொதுமயானத்தில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தமது 91 வது வயதில் லதா வல்பொல நேற்று (27) காலமானார்.
1934 ஆம் ஆண்டு கல்கிசையில் பிறந்த லதா வல்பொல, 1946 ஆம் ஆண்டு தனது 12 ஆவது வயதில் அன்றைய ‘ரேடியோ சிலோன்’ வானொலியில் தமது முதல் பாடலைப் பாடினார்.
அவர் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
அவற்றில் வெளிநாட்டு மொழிப் பாடல்களும் அடங்குகின்றன.
1953 ஆம் ஆண்டு ‘எதா ரே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் பின்னணிப் பாடகியாக அறிமுகமான அவர், கடந்த பல தசாப்தங்களாக 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குத் தமது குரலால் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














