மெக்சிகோவின் தெற்கு மாநிலமான ஓக்ஸாக்காவில் (Oaxaca) 250 பேரை ஏற்றிச் சென்ற இன்டர் ஓசியானிக் ரயில் தடம் புரண்டு, விபத்துக்குள்ளானதில் குறைந்தது 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (28) தெரிவித்தனர்.
நிசாண்டா நகருக்கு அருகே தடம் புரண்ட ரயில் பயணித்தின் போது, ஒன்பது பணியாளர்கள் மற்றும் 241 பயணிகளை ஏற்றிச் சென்றதாக மெக்சிகன் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
வித்தினை அடுத்து ரயிலில் பயணித்த 139 பேர் ஆபத்தில் இருந்து மீண்டதாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் எக்ஸில் தெரிவித்தார்.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஓக்ஸாகா ஆளுநர் சாலமன் ஜாரா குரூஸ் இரங்கல் தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாநில அதிகாரிகள் கூட்டாட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் உறுதிபடுத்தினார்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து மெக்சிகோவின் சடஅலுவலகம் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளதாக சட்டமா அதிபர் எர்னஸ்டினா கோடோய் ராமோஸ் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
















