பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான எச்சரிக்கையாக, நாட்டின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றி முற்றுகையிடுவதைப் போல, தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (28) திட்டமிடப்பட்ட பயிற்சிகளுக்கு இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் ரொக்கெட் படை அனுப்பப்படும்.
இதில் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சிகள் அடங்கும் என்றும் சீன இராணுவம் தெரிவித்துள்ளது.
“Justice Mission 2025” என்ற பெயரில், அமெரிக்கா தனது மிகப்பெரிய ஆயுதப் பொதிகளில் ஒன்றை தாய்வானுக்கு $11 பில்லியன் (£8.2 பில்லியன்) பெறுமதியான விற்பனை செய்வதாக அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் இந்தப் பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இந்த நடவடிக்கைக்கு பெய்ஜிங் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்தது.
இந்த ஆண்டு தனது பாதுகாப்பை அதிகரிக்கும் தாய்வானின் முயற்சி, சுயராஜ்ய தீவை தனது பிரதேசமாகக் கூறும் பெய்ஜிங்கையும் கோபப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தாய்வானின் ஜனாதிபதி அலுவலகம் வரவிருக்கும் சீனப் பயிற்சிகளை விமர்சித்துள்ளது.
அவை சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான சவால் என்று கூறியுள்ளது.
திங்க்கிழமை (29) காலை தாய்வானைச் சுற்றி சீன விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கண்டறிந்ததாகவும், நிலைமையைக் கண்காணிக்க தங்கள் சொந்தப் படைகளையும் ஏவுகணை அமைப்புகளையும் நிலைநிறுத்தியதாகவும் தாய்வானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் பெய்ஜிங் தாய்வான் நீரிணையில் இராணுவப் பயிற்சிகளை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.














