இரத்தினபுரி, திரிவனகெட்டிய சந்தியில் இன்று (31) காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிவனகெட்டிய சந்தியில் இன்று அதிகாலை 5:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இரத்தினபுரியிலிருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி கட்டுமானப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, மொனராகலையிலிருந்து ஹொரணை நோக்கிச் சென்ற வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் விளைவாக வேனின் சாரதி பலத்த காயமடைந்தார், வேனில் இருந்த மேலும் மூன்று பயணிகளும் காயமடைந்தனர்.
வேன் மீது மோதிய பின்னர், லொறி கவிழ்ந்ததனால், லொறியின் உதவியாளர் காயமடைந்தார்.
விபத்து குறித்து இரனத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














