பிறந்திருக்கும் 2026 பராபவ புது வருடத்தை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள், இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புது வருட வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிப்பதாவது:
“அனைவரினது வாழ்விலும் வெற்றி, வளம், அமைதி, நிம்மதி, மனநிறைவு நிரம்பியதாக மலரட்டும். இந்த புத்தாண்டில் நீங்கள் நினைத்த எல்லா காரியங்களும் நிறைவேறி, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கமும் அழகாக ஒளிர வேண்டும்.”
என்றும், “பிறந்திருக்கும் இந்த 2026 பராபவ புதிய ஆண்டில், நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேற வேண்டும் என்பதுடன், உங்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியங்களை அடைய புதிய முயற்சிகளுடன் தொடர்ந்து பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “இலங்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி, இன்பம் நிரம்பிய, நலனும் அமைதியும் நிறைந்த ஆண்டாக இந்த புதிய ஆண்டு அமைய இறைவனை பிரார்த்திப்போமாக.”
எனவும் ஜீவன் தொண்டமான் அவர்கள் தனது 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.














