புதிய சிந்தனை, புதிய இலக்குகளை உருவாக்கும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு புதிய வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் இவ்வருடமானது மக்களுக்கு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பினையும் கொண்டு வருகிற ஆண்டாக அமைய இறைவனைப் பிராத்திக்கின்றேன்.
இப்புத்தாண்டு அனைத்து மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.
கடந்த வருடத்தில் எதிர்கொண்ட சவால்களை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டை வெற்றிகரமாக மாற்றி, வாழ்வினை வளப்படுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் சமூகத்தில் அனைவரும் அன்பையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில், நாட்டிற்குள் ஒற்றுமையாகவும், நல்லிணக்கத்துடனும் இருந்திட அனைவருக்கும் புத்தாண்டு நல்வாத்துக்கள் என தெரிவித்துள்ளார்.














