அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான போராட்டங்களில் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை (01) ஈரானில் தொடர்ந்த அமைதியின்மையால் அதிக உயிர்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தென்மேற்கு ஈரானில் உள்ள லார்டேகன் நகரில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் இறந்ததாக ஈரானிய ஊடக நிறுவனமான Fars news நிறுவனமும் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவும் தெரிவித்தன.
மேலும், நாட்டின் மேற்கில் உள்ள அஸ்னாவில் மூன்று பேரும், கோஹ்தாஷ்டில் ஒருவரும் உயிரிழந்தாக Fars news குறிப்பிட்டுள்ளது.
வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் போது வாகனங்கள் தீக்கிரையாக்கப்படுவது வெளிப்படுத்தப்பட்டது.
பல போராட்டக்காரர்கள் நாட்டின் உச்ச தலைவரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளனர்.
சிலர் முடியாட்சிக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அமைதியின்மையைத் தணிக்கும் முயற்சியாக அதிகாரிகள் வங்கி விடுமுறை அறிவித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை (டிசம்பர் 31) நாடு முழுவதும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மூடப்பட்டன.
திறந்த சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக ஈரானிய நாணயத்தின் மதிப்பு மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் இந்த போராட்டம் தெஹ்ரானில் வெடித்தது.
2022 ஆம் ஆண்டு மஹ்சா அமினி என்ற இளம் பெண் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது இறந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட எழுச்சிக்குப் பின்னர் இந்த போராட்டங்கள் மிகவும் பரவலாக உள்ளன.














