2026 ஆம் ஆண்டிற்கான மின்சார கட்டணங்களை திருத்தக் கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) இலங்கை மின்சார சபையி (CEB) ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.
அந்த சமர்ப்பிப்பில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 11.57% கட்டண உயர்வு அவசியம் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
முன்மொழியப்பட்ட அதிகரிப்பை அங்கீகரிப்பதா இல்லையா என்பது குறித்து உரிய நடைமுறைகள் மற்றும் விவாதங்களுக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று PUCSL தெரிவித்துள்ளது.
















