மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) தகவலின்படி, 2026 ஜனவரி 5 முதல் அனைத்து வாகனப் பதிவுகள் மற்றும் உரிமை பரிமாற்றங்களுக்கும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்கள், கை டிராக்டர்கள், டிராக்டர்கள், டிராக்டர் ட்ரெய்லர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர அனைத்து வாகனங்களுக்கும் இந்தத் தேவை பொருந்தும்.
அவற்றை தவிர ஏனைய அனைத்து புதிய வாகனங்களின் உரிமையையும் பதிவுசெய்து மாற்றும்போது தொடர்புடைய புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண் மற்றும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) தொடர்புடைய தரவுத்தள அமைப்புகளில் உள்ளிடுவது கட்டாயமாகும்.
சில மோட்டார் போக்குவரத்து சேவைகளுக்கு TIN தேவை முதன்முதலில் 2025 ஏப்ரல் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் புதுப்பிக்கப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுத்தளத்தில் முழு அமுலாக்கம் 2026 ஜனவரி 5 அன்று தொடங்கியது.











