முச்சக்கர வண்டி திருட்டுகளுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை நுகேகொடை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
2025 டிசம்பர் 28 அன்று மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்ட ஒரு முச்சக்கர வண்டி திருட்டு தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, 2026 ஜனவரி 10 அன்று இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் 2026 ஜனவரி 11 அன்று மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் திருடப்பட்ட முச்சக்கர வண்டி குருவிட்ட பகுதியில் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளில் யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்ல ஆகிய இடங்களில் மேலும் 10 திருடப்பட்ட முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைதான 30, 32 மற்றும் 46 வயதுடைய சந்தேக நபர்கள் களனி, அம்பலாந்தோட்டை மற்றும் பரகடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்கள் திருடப்பட்ட வாகனங்களின் நிறம், சேசிஸ் எண்கள் மற்றும் இயந்திர எண்களை மாற்றியமைத்து, போலி எண் தகடுகள் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை நுகேகொடை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.













