தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை மறுபரிசீலனை செய்து 2027 இல் தொடங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், 1 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த ஆண்டு எவ்வித மாற்றமுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு முன்னெடுத்த விசாரணை அறிக்கைகளின் முடிவுகளின் அடிப்படையில், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இங்கு குறிப்பிட்டார்.
அதற்கமைய, மனிதவள மேம்பாடு , உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் , மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு நடவடிக்கைகள் , பாடத்திட்ட மேம்பாடு , பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு ஆகிய 5 முக்கிய தூண்களின் அடிப்படையில் குறித்த கல்விச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.















