ஐரோப்பாவில் போர் சூழ்நிலை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாப்பதற்கான முறையான தற்காப்புத் திட்டம் தற்போதைய பிரித்தானியாவிடம் இல்லை என்று அந்நாட்டின் ராணுவத் தளபதி வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, போர் காலங்களில் தேசிய சுகாதார சேவையை (NHS) எவ்வாறு ஒருங்கிணைப்பது மற்றும் காயமடைந்த பொதுமக்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது குறித்த தெளிவான வரைபடங்கள் ஏதுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்னர் கைவிடப்பட்ட அரசு போர் கையேடு (Government War Book) போன்ற ஒரு விரிவான வழிகாட்டி இன்னும் மறுசீரமைக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும், ராணுவ தளவாடங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை பெரும் தடையாக இருப்பதாகவும், கூடுதல் நிதி இன்றி முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விசுத்துள்ளார்.
இதேவேளை நேட்டோ அமைப்பின் விதிமுறைகளின்படி ஒவ்வொரு நாடும் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்ற போதிலும், பிரித்தானியா இந்தப் பாதுகாப்புத் தயார்நிலையில் பின்தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.













