எக்ஸ் (X) தளத்தின் குரோக் (Grok) செயற்கை நுண்ணறிவு, பெண்களையும் குழந்தைகளையும் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை உருவாக்குவது பல நாடுகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த விவகாரத்தில் அந்நிறுவனம் தற்கட்டுப்பாட்டுடன் செயல்படாவிட்டால், பிரித்தானிய அரசாங்கம் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுக்கும் என பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க அந்நாட்டு அரசு புதிய சட்ட திருத்தங்களை விரைவுபடுத்துவதுடன், இந்தத் தளம் மீதான முறையான விசாரணையையும் தொடங்கியுள்ளது.
சமூக ஊடகங்கள் லாபத்திற்காக இத்தகைய தீய செயல்களை அனுமதிப்பதை அனுமதிக்க முடியாது என்பதில் பிரித்தானியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில் இதே தொழில்நுட்பத்தை அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தனது பயன்பாட்டிற்கு இணைக்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், எலோன் மஸ்க் இந்த நடவடிக்கைகளை கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தணிக்கை என்று விமர்சித்துள்ளார்.













