அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த அவலூறு வழக்கை நிராகரிக்கக் கோரி பிபிசி (BBC) நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் திகதி நடைபெற்ற வன்முறை தொடர்பான ஆவணப்படத்தில் தனது உரையைத் தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, டிரம்ப் பெரும் தொகையை இழப்பீடாகக் கோரியுள்ளார்.
இருப்பினும், இந்த வழக்கை விசாரிக்க புளோரிடா நீதிமன்றத்திற்குத் தகுந்த அதிகாரம் இல்லை என்றும், உள்நோக்கத்துடன் தாங்கள் செயல்படவில்லை என்றும் பிபிசி வாதிடுகிறது.
இதேவேளை, இந்த விவகாரம் ஏற்கனவே பிபிசி நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பதவி விலகுவதற்குக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டால், 2027-ஆம் ஆண்டில் இதற்கான நீதிமன்ற விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான சூழலில் இப்போதைக்கு ஆதாரங்களைத் திரட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறு பிபிசி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,.













