(West Midlands ) மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறைத் தலைவர் (Craig Guildford ) கிரெய்க் கில்ட்ஃபோர்டு, ஒரு கால்பந்து போட்டியின் போது இஸ்ரேலிய ரசிகர்களுக்குத் தடை விதித்த விவகாரத்தில் எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து உடனடியாக ஓய்வு பெற்றுள்ளார்.
பாதுகாப்பைக் காரணம் காட்டி எடுக்கப்பட்ட இந்த முடிவு, அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கியதற்கும், தடையை நியாயப்படுத்த செயற்கை நுண்ணறிவை தவறாகப் பயன்படுத்தியதற்கும் (Craig Guildford ) கில்ட்ஃபோர்டு மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்தத் தடையானது இஸ்லாமியவாத அமைப்புகளுக்குப் பணிந்து எடுக்கப்பட்ட முடிவு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், உள்துறைச் செயலரும் அவர் மீது நம்பிக்கையில்லை என்று அறிவித்தார்.
இருப்பினும், (Craig Guildford ) கில்ட்ஃபோர்டின் ஆதரவாளர்கள் அவர் வன்முறையைத் தடுக்கவே தனது கடமையைச் செய்ததாகக் கூறி இம்முடிவை அநீதியானது என்று விமர்சித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் வில்லா பார்க்கில் ஆஸ்டன் வில்லாவுக்கு எதிரான யூரோபா லீக் போட்டியில் மக்காபி டெல் அவிவ் ஆதரவாளர்களுக்கு (Craig Guildford ) கிரெய்க் கில்ட்ஃபோர்டின் படை தடை விதித்ததைத் தொடர்ந்து, காவல்துறைத் தலைவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் கூறியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு ஒய்வு பெற தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஸ்காட் கிரீன் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு, சமூகத்தினரிடையே காவல்துறையின் நற்பெயரை மீட்டெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.













