2026 ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் 131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் எனவும் அதிகார சபை கூறுகிறது.
இந்த 15 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக
விளங்குவதுடன், அந்த எண்ணிக்கை 23,786 ஆகப் பதிவாகியுள்ளது.
அதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் மற்றும் ஜெர்மனியிலிருந்து 9,260 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.












