வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான கே.பிரபாகரன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த முன்பள்ளியின்; பெயர் பலகையானது மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்காக கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோரால் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டதுடன், முன்பள்ளியும் நடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், கோடடக் கல்வி அதிகாரி செல்வரட்ணம், பாடசாலை அதிபர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.













