நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (19) காலை கொட்டாவை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரது மோசடிகள் குறித்து ரத்மலானை, கல்கிசை, மகரகம, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சந்தேகநபர் பல்வேறு வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள காசாளர்களை (Cashiers) ஏமாற்றிப் பணம் பெற்றுள்ளதாகவும், அந்தப் பணத்தைப் போதைப்பொருள் வாங்குவதற்காகப் பயன்படுத்தியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் இன்று (19) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.














