ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தின் 13 ஆவது போட்டியில் அயர்லாந்து அணியை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
நமீபியாவின், விண்ட்ஹோக்கில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற இப் போட்டியில் வலுவான நடுத்தர துடுப்பாட்ட வீரர்களின் இணைப்பாட்டம் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை 50 ஓவர்கள் முடிவில் 267/5 ஆக உயர்த்தியது.
இலங்கை அணியின் தலைவர் விமத் தின்சரா 102 பந்துகளில் 95 ஓட்டங்களையும், சாமிக ஹீனடிகல 51 ஓட்டங்களையும் மற்றும் கவிஜா கமகே 49 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
பின்னர் அவர்களின் நேர்த்தியான பந்து வீச்சானது அயர்லாந்தை 40.1 ஓவர்களில் 161 ஓட்டங்களுக்கு சுருட்டியது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டல்னித் சிகேரா 4 விக்கெட்டுகளையும், ரசித் நிம்சரா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக டல்னித் சிகேரா தெரிவானார்.
இந்த வெற்றியுடன் இலங்கை அணியானது சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்தது.
அதேநேரம், போட்டியின் சூப்பர் சிக்ஸஸ் நிலைக்கு தகுதி பெற வியாழக்கிழமை அயர்லாந்து ஜப்பானை தோற்கடிக்க வேண்டும்.
















