நாட்டிங்ஹாம்ஷையரின் கிம்பர்லி பகுதியில் ஒரு தம்பதியினர் தங்கள் இல்லத்தில் பயங்கரமான ஒரு கொள்ளை சம்பவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
முகமூடி அணிந்த ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சுத்தியல் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து தம்பதியினரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
கொள்ளையர்கள் குறிப்பாக விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பாதுகாப்பான பெட்டகம் மற்றும் அந்த தம்பதியின் மகன் இருக்கும் இடம் குறித்து குறிவைத்து விசாரித்துள்ளனர்.
சம்பவத்தில் சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டதுடன் இந்த சம்பவம், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிவதாக தாக்குதலுக்குள்ளான தம்பதியர் தெரிவித்துள்ளனர்.
கணவர் எதிர்த்துப் போராட முயன்றபோது அவர் பலமாகத் தாக்கப்பட்டார் எனவும் இறுதியில் அவர்கள் மிரட்டப்பட்டு விலையுயர்ந்த பொருட்களை ஒப்படைக்க நேரிட்டது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தற்செயலானது அல்ல எனவும் மாறாக ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் எனவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.















