இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Besant) சூசகமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்கியதால் அதன் மீது நாங்கள் கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம் எனவும் இது எங்களுக்கு வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது வெகுவாக குறைந்து விட்டது எனவும் இதனால் இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை நீக்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் இதனால் இந்தியா மீதான கூடுதல் வரி நீக்கப்படலாம் என வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிப்பது தொடர்பான சட்டமூலம் மீது அமெரிக்க பாராளுமன்றத்தில் ஆலோசனை நடைபெறும் நிலையில், இந்தியா மீதான கூடுதல் வரி நீக்கப்படலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.















