கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் (Greater Manchester) (Andy Burnham) ஆண்டி பர்ன்ஹாம், வெற்றிடமாக உள்ள கோர்டன் மற்றும் டென்டன் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய நிலையில், அதற்கு தொழிற் கட்சியின் தேசிய செயற்குழு (NEC) தடை விதித்துள்ளது.
பர்ன்ஹாம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினால், அது கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு அரசியல் ரீதியாக சவாலாக அமையும் என்ற அச்சமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
மேயர் பதவியை அவர் துறந்தால் மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டிய நிதிச் சுமை ஏற்படும் என்பதும் ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது.
கட்சியின் இந்த நடவடிக்கைக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இது எதிர்க்கட்சியினருக்கு சாதகமாகிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.
இதேவேளை, தற்போது இந்தப் பதவிக்கு தகுதியான பிற வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் கட்சியின் தேர்வுக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.












