இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியானது இன்று பிற்பகல் 02.30 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகும்.
தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தீர்மானமிக்கப் போட்டியானது இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளிலும் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவுக்கு ஓய்வு அளித்துள்ளது.
இன்றைய போட்டியில் அவர் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, ஜாக் கிராலி முழங்கால் காயம் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை.
இன்றைய போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக் குறியாகவுள்ளது.
அவர் இல்லாது போனால், ரெஹான் அஹமட் தற்காலிக தொடக்க வீரராக விளையாடுவார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இதுவரை 81 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.
இலங்கை அணி 38 வெற்றிகளையும், இங்கிலாந்து அணி 39 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது, மூன்று போட்டிகள் எந்த முடிவும் எட்டவில்லை.
ESPNcricinfoவின்படி, இலங்கை மண்ணில், இரு அணிகளும் 28 முறை மோதியுள்ளன.
இங்கிலாந்து அணி 10 முறை வென்றுள்ள நிலையில், இலங்கை அணி 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ஒரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
ஆர். பிரேமதாச மைதானத்தில், இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன.
இலங்கை அணி 10-2 வெற்றி-தோல்வி சாதனையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.















