சந்திரா புயல் காரணமாக இங்கிலாந்து முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் ரயில், விமானம் மற்றும் படகு போக்குவரத்துகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நூற்றுக்கணக்கான வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சோமர்செட் மற்றும் டெவன் போன்ற இடங்களில் பல வீடுகள் நீரில் மூழ்கி பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில் பெய்த வரலாறு காணாத மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து, சாலைகள் மூடப்பட்டு பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக மக்கள் பயணங்களைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதோடு, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
அடுத்தடுத்த புயல்களின் தாக்கத்தால் நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி அபாயங்கள் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன.













