பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால், அவரது பார்வைத்திறன் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
73 வயதான இம்ரான் கான், 2023 ஓகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் தனது சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நம்பகமான ஊடக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ கட்சி தெரிவித்துள்ளதாவது, முன்னாள் பிரதமரின் வலது கண்ணில் ‘ரெட்டினல் வெய்ன் ஒக்லூஷன்’ (Retinal Vein Occlusion) எனப்படும் விழித்திரை நரம்பு அடைப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது விழித்திரையில் ஆபத்தான அடைப்பை ஏற்படுத்தும் ஒரு நிலை என்றுசுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.













