உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீன நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (31) சீனாவின் நிதி மையமான ஷாங்காயை சென்றடைந்துள்ளார்.
பெய்ஜிங் மற்றும் லண்டனுக்கு இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எட்டு ஆண்டுகளின் பின்னரான இங்கிலாந்துப் பிரதமரின் முதல் சீனப் பயணத்தின் போது ஸ்டார்மர் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட சீனத் தலைவர்களைச் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே பல வருடங்களாக நீடித்த பிளவுகளுக்குப் பின்னர் உறவுகளை மீண்டும் மேம்படுவதற்கான அடையாளமாகக் கருதப்படும் நீண்டகால, நிலையான மூலோபாய கூட்டாண்மையைத் தொடர இதன்போது இருவரும் உறுதியளித்துள்ளனர்.
பெய்ஜிங் மற்றும் லண்டனுக்கு இடையிலான எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன், சீனாவுடன் வர்த்தகம் செய்வது இங்கிலாந்துக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்.













