சட்டவிரோதமான முறையில் 117 ஆமை முட்டைகளைத் தன்வசம் வைத்திருந்த ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் நேற்று திருகோணமலை, கல்லடிச்சேனை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இந்த 117 முட்டைகளையும் கொண்டு சென்றுகொண்டிருந்த போதே கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர் திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் ஆமை முட்டைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சேருநுவர வனஜீவிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கக் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.














