2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைகள் தொழில்நுட்பவியல் (Bio Systems Technology) செயல்முறைப் பரீட்சையானது எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நாடு முழுவதும் 74 நிலையங்களில் ஆரம்பமாகும் இந்தத் தேர்வு பெப்ரவரி 11 ஆம் திகதி வரை நடைபெறும்.
பாடசாலை மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் தனியார் மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் அவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.














