ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வணிக சந்தையொன்றில் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீவிபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
















