இந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட விழிப்புணர்வு மற்றும் உயிர்காக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டார்.












